search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை வீழ்ச்சி"

    • ஒரு கூடை தக்காளி 50 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு உள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் தக்காளிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு தக்காளிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் தக்காளி பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு கூடை தக்காளி பழங்கள் 1500 முதல் 2000 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு கூடை தக்காளி 50 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    தக்காளி அதிக அளவில் விளைச்சல் இருப்பதால் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த தக்காளி விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு உள்ளனர். மேலும் பல விவசாயிகள் சாலையோரம் தக்காளி பழங்களை வீசி விட்டு செல்கின்றனர். சாலை ஒரங்களில் கிடக்கும் தக்காளி பழங்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விட்டு மேய்த்து வருகின்றனர்.

    ×